சினிமா செய்திகள்

10வது திருமண நாளில் மகன் பிறந்திருப்பதை அறிவித்தார் பாடலாசிரியர் விவேக்

Published On 2025-04-07 08:04 IST   |   Update On 2025-04-07 08:04:00 IST
  • கோட் படத்தில் விவேக் எழுதிய மட்ட பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
  • ரெட்ரோ படத்தில் விவேக் எழுதிய கனிமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது.

பிரபல நடிகர்களின் படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதி புகழ்பெற்றவர் பாடலாசிரியர் விவேக். விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் விவேக் எழுதிய மட்ட பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது ரெட்ரோ படத்தில் விவேக் எழுதிய கனிமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய 10வது திருமண நாளில், தனக்கு மகன் பிறந்திருப்பதை பாடலாசிரியர் விவேக் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவேக் பகிர்ந்துள்ளார். 

Tags:    

Similar News