சினிமா செய்திகள்

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் ஆரோமலே படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ்

Published On 2025-10-28 21:19 IST   |   Update On 2025-10-28 21:19:00 IST
  • நவம்பர் 7ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்துள்ளார்.

இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 7-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டிரைலர் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகியோரின் Husky Dog டான்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News