சினிமா செய்திகள்

உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவுக்கு எனக்கும்..! அரசு பாராட்டு விழா குறித்து இளையராஜா மகிழ்ச்சி

Published On 2025-09-09 20:39 IST   |   Update On 2025-09-09 20:39:00 IST
  • அரசு சார்பில் நடத்தப்படும் முதல் பாராட்டு விழா.
  • தமிழக மக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள எதிர்பார்ப்பார்கள்- இளையராஜா

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.

அந்த வகையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது குறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில் "அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது இது முதல்முறை. உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவுக்கு எனக்கு சந்தோஷம். தமிழக மக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள எதிர்பார்ப்பார்கள். ஆனால், நேரு ஸ்டேடியத்தில் இடம் போதாததால் அனைவராலும் கலந்து கொள்ள முடியாது" இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

Similar News