சினிமா செய்திகள்

'கருத்த மச்சான்' பாடலால் 'டியூட்' படத்திற்கு சிக்கல் - ஐகோர்ட்டில் இளையராஜா பரபரப்பு புகார்

Published On 2025-10-22 13:27 IST   |   Update On 2025-10-22 13:27:00 IST
  • 'டியூட்' படத்தில் இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • கருத்த மச்சான் பாடல் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அனுமதியின்றி தனது பாடல்களை வேறு படங்களுக்கு பயன்படுத்தியதாக சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் இன்று தாக்கல் செய்தது.

அப்போது, Dude திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பு வாதம் முன்வைத்தனர். அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம் என நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

'டியூட்' படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News