சினிமா செய்திகள்

அஜித் சாரை வைத்து கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன் - வெங்கட் பிரபு

Published On 2025-04-13 20:23 IST   |   Update On 2025-04-13 20:23:00 IST
  • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
  • ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தில் பழைய அஜித் படங்களில் ரெஃபெரன்ஸ் மற்றும் வசன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.அஜித்தை இப்படி ஒரு மாஸ் கமெர்ஷியல் கதாப்பாத்திரத்தில் பார்த்து பல நாட்கள் ஆனதால் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் உருவாவததற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பினர். அதற்கு வெங்கட் பிரபு " நான் அஜித் சாருடன் அடுத்து மங்காத்தா 2 திரைப்படம் இயக்குவேனானா? என தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து திரைப்படம் இயக்குவேன். எதுவும் உறுதியாக கூறமுடியாது" என கூறினார்.

மேலும் ' ஆதி ரவிச்சந்திரன் கூறினார் அவர் தொழிலில் மிகவும் டவுனாக இருந்த போது அவருக்கு வாய்ப்பளித்தார் என்று. அதேப்போல் தான் எனக்கு அவர் மங்காத்தா படத்தை இயக்க வாய்ப்பளித்தார்". என மிகவும் பெருமிதத்துடன் கூறினார்.



Tags:    

Similar News