சினிமா செய்திகள்

சஞ்சய் இக்கதைக்காக செய்த உழைப்பு என்னை பிரமிக்க வைத்தது - சந்தீப் கிஷன்

Published On 2024-11-30 16:27 IST   |   Update On 2024-11-30 16:27:00 IST
  • சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
  • படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.

லைகா புரொடக்ஷன்ஸ் ஜிகேஎம் தமிழ் குமரன் கூறும்போது, "நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக, அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். 'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும். தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்" என்றார்.

இப்படத்தை பற்றி நடிகர் சந்தீப் கிஷன் கூறும்பொழுது " நான் ராயன் திரைப்படம் நடிப்பதற்கு முன்பே. நானும் ஜேசன் சஞ்சயும் சந்தித்தோம். இப்படத்தின் கதையை இடைவிடாமல் 50 நிமிடத்திற்கு என்னிடம் கூறினார். அவர் இந்த கதைக்காக போட்ட மெனெக்கெடல் மற்றும் உழைப்பை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. இப்படம் ஒரு ஆக்ஷன் மற்றும் ஃபன்னான திரைப்படமாக இருக்கும். இத்திரைப்படம் ஒரு பான் இந்தியன் திரைப்படமாக உருவாகவுள்ளது. ஜேசனின் முதல் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாகவுள்ளது." என கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News