சினிமா செய்திகள்
பெரும் அரசியல் ஆளுமை: திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,விசிக தலைவர் திருமாவளவனுக்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா.ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில் "இந்திய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் அரசியல் ஆளுமை, பெரும் மதிப்புக்குறிய தலைவர், அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤️?" என பதிவிட்டுள்ளார்.