சினிமா செய்திகள்

எழுத்தாளரும் இயக்குனருமான ஜெயபாரதி காலமானார்

Published On 2024-12-06 09:36 IST   |   Update On 2024-12-06 09:36:00 IST
  • ‘புத்திரன்’ படம் தமிழ்நாடு அரசின் 3 விருதுகளை பெற்றது.
  • ஜெயபாரதி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனரும், எழுத்தாளருமான ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக காலமானார் அவருக்கு வயது 77.

கடந்த 1979-ம் ஆண்டு கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான படம் 'குடிசை'. இப்படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றது.

அதனைத்தொடர்ந்து இவரது இயக்கத்தில் 'ஊமை ஜனங்கள்', 'ரெண்டும் ரெண்டும் அஞ்சு', உச்சி வெயில்', 'நண்பா நண்பா', 'குருஷேத்திரம்', 'புத்திரன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் 'புத்திரன்' படம் தமிழ்நாடு அரசின் 3 விருதுகளை பெற்றது.

இந்த சூழலில், இயக்குனர் ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News