சினிமா செய்திகள்

வட சென்னை 2 படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த தனுஷ்- ரசிகர்கள் ஆரவாரம்

Published On 2025-06-02 10:44 IST   |   Update On 2025-06-02 10:44:00 IST
  • வெற்றி மாறன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை.
  • தனுஷ் நடித்த குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக பல வருடங்களாக இருந்து வருகிறது. எப்பொழுது வெற்றி மாறன் எதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் இப்படத்தின் அப்டேட் பற்றி கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் தனுஷ் நடித்த குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் ரசிகர்கள் வட சென்னை 2 படத்தின் அப்டேட் கேட்டனர். தனுஷ் அதற்கு " 2018-ல இருந்து கேட்டுட்டு இருக்கீங்க அதனால் அடுத்த வருஷம் படத்தின் வேலைகள் தொடங்குகிறது" என தெரிவித்துள்ளார். இதனால் வச சென்னை 2 வருகிறது என ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

Tags:    

Similar News