சினிமா செய்திகள்
விசாரணைக்கு வரும் குட் பேட் அக்லி படத்திற்கு எதிரான இளையராஜாவின் வழக்கு!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியது. இப்படத்தில் திரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொண்டார்.
இப்படத்தில் இளையராஜா இசையமைத்த சில பாடல்களின் ரீமிக்ஸ் வெர்ஷன்கள் படத்தில் பயன்படுத்திருப்பர். தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதி விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.