காரில் உட்கார்ந்து குழந்தைப்போல ரசித்த அஜித் - வைரல் வீடியோ
- அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அஜித் நடிப்பது மட்டுமல்லாமல் ரேசிங்கிலும் அதிகம் ஆர்வம் காட்டும் நபராவார். சமீபத்தில் விலைஉயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் இரண்டை வாங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் குமார் கார் வாங்கும் முன் அதில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து ஆக்சிலேடர் அலுத்தி ரசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதுவும் குறிப்பாக கார் உருமும் சத்தம் கேட்கும் பொழுது அஜித்தின் சிரிப்பு ஒரு குழந்தையைப் போல இருப்பது மிகவும் க்யூட்டாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.