சினிமா செய்திகள்

Agent Sardar is Back - சர்தார் 2 படத்தின் டீசர் நாளை வெளியீடு

Published On 2025-03-30 17:51 IST   |   Update On 2025-03-30 17:51:00 IST
  • மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதில் சர்தார் பாகம் 1 படத்தின் ஒரு ரீகேப் போல அமைந்துள்ளது.

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார்.

Full View
Tags:    

Similar News