சினிமா செய்திகள்

'கெத்தான'ஆண் எப்படி இருக்க வேண்டும் நடிகை சுவாசிகா பதில்

Published On 2025-05-02 12:49 IST   |   Update On 2025-05-02 12:49:00 IST
  • லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சுவாசிகா.
  • ரெட்ரோ படத்திலும் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.

லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சுவாசிகா.

சூர்யா நடிப்பில் நேற்று வெளியான ரெட்ரோ படத்திலும் அவருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் சுவாசிகாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அதில் அவர் பேசியதாவது

`லப்பர் பந்து படத்தின் மூலம் எனக்கு ரொம்ப பாசம் கிடைத்திருக்கிறது. சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகர் ஜெயராம் கையினால் பெற்றது மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய கனவுகள் நிறைவேற உதவி செய்யும் என் புருஷனுக்கு மிகவும் நன்றி. படத்தில் நான் கெத்து பொண்டாட்டி. இங்கே நான் பிரேம் பொண்டாட்டி.'

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சுவாசிகாவிடம் ஒரு ஆண்மகன் கெத்தாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சுவாசிகா, கெத்தான ஆண் என்பவர் அவருடைய மனைவி மகள்கள் உடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.

அப்படி நிறைவேற்றும் ஆண் தான் 'கெத்தானவர்' என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News