சினிமா செய்திகள்

உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

Published On 2024-06-11 18:02 IST   |   Update On 2024-06-11 18:02:00 IST
  • தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ரெஷ்மா நடித்து வருகிறார்.
  • பாக்கியலட்சுமி, சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

சென்னை:

தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளரான பிரசாத் அவர்களின் மகள் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. கடந்த 2015-ம் ஆண்டு தமிழில் வெளியான "மசாலா படம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரேஷ்மா, அதற்கு முன்னதாகவே தெலுங்கு மொழியில் சில சீரியல்களில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் 'புஷ்பா' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, சீரியல்களில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

சினிமா, சீரியல் என நடித்து அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி போல்டாக பல போட்டோஷூட்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Full View


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

Tags:    

Similar News