null
மனநல காப்பகத்தில் நடிகை மீரா மிதுன் அனுமதி..!
- கைது செய்து இன்றைக்குள் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
- கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், மனநிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை சென்னை அழைத்து வர இயலவில்லை என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 3 ஆண்டுகளால் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் டெல்லியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் (இன்று) ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.