சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் திரை உலகை தவறாக பேசுபவர்களுக்கு 'ஆப்பு' வைக்க வேண்டும்- நடிகர் வடிவேலு

Published On 2025-09-21 17:02 IST   |   Update On 2025-09-21 17:02:00 IST
  • சிறியவர்கள், பெரியவர்கள் என்று கூட பார்க்காமல் தாறு மாறாக பேசுகிறார்கள்.
  • பத்து பேர் சேர்ந்து சினிமாவையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியதாவது:-

நமக்குள் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளது. அனைவரிடமும் ஒற்றுமை வரவேண்டும்.

சமூக வலைதளங்களில் திரை உலகினரை பற்றி சிறியவர்கள், பெரியவர்கள் என்று கூட பார்க்காமல் தாறு மாறாக பேசுகிறார்கள்.

நம்ம ஆட்களிலேயே சில பேர் அவர்களுக்கு துணை போகிறார்கள். பத்து பேர் சேர்ந்து சினிமாவையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தவறாக பேசுபவர்களுக்கு 'ஆப்பு' வைக்க வேண்டும். நம்மை தூங்க விடாமல் ஆக்கும் அவர்களை தூங்கவிடாமல் செய்து நாம் நிம்மதியாக தூங்க வேண்டும். அவதூறு கருத்துக்களை பரபரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News