சினிமா செய்திகள்

A Boy To Man Journey - ஆரோமலே படத்தின் இண்ட்ரோ வீடியோ ரிலீஸ்!

Published On 2025-09-11 17:44 IST   |   Update On 2025-09-11 17:44:00 IST
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து `ஆரோமலே' படத்தில் நடிக்கின்றனர்.

முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது.

இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்தார்.

இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.

இந்நிலையில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து `ஆரோமலே' படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒரு முன்னோட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையன் அவனின் வாழ்க்கை , நட்பு, காதல், வெவ்வேறு பருவத்தில் வேறு வேறு காதல் என காட்சிகள் அமைந்துள்ளது.

இந்த படத்தை சாரங் தியாகு இயக்க. சித்து குமார் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Full View

Tags:    

Similar News