சினிமா செய்திகள்
நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்.

Published On 2022-01-31 11:34 IST   |   Update On 2022-01-31 11:34:00 IST
வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். 


ஷிவானி

முன்னதாக இப்படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சனைகளால் இவர் அதில் இணையவில்லை எனவும் பிரியாவுக்குப் பதிலாக பிக்பாஸ் சீசன் 4-இல் இடம்பெற்ற ஷிவானி நாராயணன் இணையவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

மேலும் "ஷிவானியின் கதாப்பாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் படத்தில் வடிவேலுடன் நடனமாடுவதையும் காணலாம், அவர் மார்ச் மாதம் அணியில் இணைவார் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.


ஷிவானி

தற்போது ஷிவானியிடம் கமல்ஹாசனுடன் விக்ரமும், வெற்றியுடன் பம்பர் படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News