சினிமா
தினேஷ் மாஸ்டர்

தினேஷ் மாஸ்டர் பட டீசருக்கு தடை விதிக்க சென்சாருக்கு கோரிக்கை

Published On 2021-02-17 21:02 IST   |   Update On 2021-02-17 21:02:00 IST
நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் நாயே பேயே டீசருக்கு தடை விதிக்க சென்சாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நாயே பேயே. இந்த படத்தை சக்திவாசன் இயக்குகிறார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 



நாயே பேயே படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. எடிட்டர் மோகன், இயக்குனர்கள் பாக்யராஜ், எழில் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். படத்தின் டீசர் ஒன்று அன்றே வெளியானது. அந்த டீசரில் நாயகன் பேயை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அதற்கு காரணமாக 90 சதவீத மனைவிகள் பேய் தானே என்று சொல்வதாகவும் வசனம் அமைந்திருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகளிர் அமைப்புகள் இந்த வசனங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டீசருக்கு தடை விதிக்க சென்சாருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News