சினிமா
திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷ்

‘பேச்சிலர்’ அடல்ட் காமெடி படமா? - இயக்குனர் சதீஷ் செல்வகுமார் விளக்கம்

Published On 2021-02-16 13:29 IST   |   Update On 2021-02-16 13:29:00 IST
‘பேச்சிலர்’ அடல்ட் காமெடி படமா என்பது குறித்து அப்படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேச்சிலர்’. இப்படத்தை இயக்குனர் சசியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கி உள்ளார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது: பேச்சிலர் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்துவிட்டு இது அடல்ட் காமெடி படமா என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இது அப்படிப்பட்ட படம் இல்லை. பேச்சுலர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களைத் தான் படமாக எடுத்திருக்கிறோம். 



எந்த இடத்திலும் எல்லை மீறாமல் படமாக்கி இருக்கிறோம். பேச்சிலர் என்கிற நிலையில் இருந்து ஒரு முழுமையான மனிதன் என்கிற நிலைக்கு ஒருவன் மாறும்போது ஏற்படுகிற மனமாற்றத்தை பதிவு செய்திருக்கிறது இப்படம். 

இது குடும்பத்தினருடன் வந்து பார்க்கும்படியான படமாக இருக்கும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லை. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இது இருக்கும்” என்றார்.

Similar News