சினிமா
விக்னேஷ் சிவன், நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு

Published On 2021-02-16 06:19 GMT   |   Update On 2021-02-16 06:19 GMT
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரிக்க உள்ள புதிய படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். 

இந்நிலையில், அவர்கள் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 



விக்னேஷ் சிவனும்,  நயன்தாராவும் இணைந்து ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து வருகின்றனர். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News