இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் பணியாற்றி உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராஜேஷ் படத்தில் தனுஷ் - ஜிவி பிரகாஷ் வெளியிட்ட சூப்பர் அப்டேட்
பதிவு: பிப்ரவரி 16, 2021 10:10
தனுஷ், ஜிவி பிரகாஷ், ராஜேஷ்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார். இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர்.
மேலும் இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியிடுவதற்காக தயாராகிறதாம். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘டா டா பாய் பாய்’ எனும் பாடலை தனுஷ் பாடியுள்ளதாக தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், விரைவில் இப்பாடலை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்பாடல் வரிகளை கானா வினோத் எழுதியுள்ளாராம்.
Related Tags :