சினிமா
சாய் தன்ஷிகா

திரைக்கு பின் பலர் உழைக்கின்றனர் - சாய் தன்ஷிகா

Published On 2021-02-15 18:56 IST   |   Update On 2021-02-15 18:56:00 IST
சசிகலா புரடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சாய் தன்ஷிகா, திரைக்கு பின் பலர் உழைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
சசிகலா புரடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் தொடக்க நிகழ்ச்சி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதனை இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.  

தன்ஷிகா பேசும்போது ’நாம் படங்களின் விமர்சனங்களை ஒரு நொடியில் விவரித்து விடுகின்றோம். ஆனால் திரைக்கு பின் பல கலைஞர்கள் உழைக்கின்றனர். அந்தகு கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிறுவனம் அமைந்திருப்பது சிறப்பு. தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம். 



இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ், குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் விரைவில் இதன் பணிகள் துவங்கவுள்ளன’. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News