சினிமா
குழந்தையுடன் மேக்னா ராஜ்

முதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Published On 2021-02-15 10:08 IST   |   Update On 2021-02-15 10:08:00 IST
மறைந்த காதல் கணவரை நினைவுகூர்ந்து முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை நேற்று சமூக வலைத்தளங்களில் நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டார்.
கன்னட திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இதனால் அவரது மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் சோகத்தில் மூழ்கினார். இவர்கள் இருவரும் 10 வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தபோது மேக்னா ராஜ் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

பின்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை மேக்னா ராஜ், இதுவரையில் குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் இருந்து வந்தார். தனக்கு, தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சர்ஜா கொடுத்த காதல் பரிசுதான் தன்னுடைய மகன் என்று மேக்னா ராஜ் கூறி வந்தார்.



மேலும் காதலர் தினத்தன்று தன்னுடைய கணவரை நினைவுகூறும் வகையில் தனது மகனை வெளியுலகிற்கு காட்டுவதாக அவர் அறிவித்து இருந்தார். அதேபோல் காதலர் தினமான நேற்று நடிகை மேக்னா ராஜ் தனது மகனின் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

தற்போது அந்த குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தையின் புகைப்படத்தை பார்த்த பலரும் ‘குட்டி சிரு வந்துவிட்டார்’ என்று சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

Similar News