சினிமா
சித்ரா

சித்ராவின் முதல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2021-02-13 18:59 IST   |   Update On 2021-02-13 18:59:00 IST
மறைந்த நடிகை சித்ராவின் முதல் படமான கால்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜே சித்ரா. சமீபத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டது இன்றும் அவரது ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் மறைந்த சித்ரா நடித்த முதல் திரைப்படம் "கால்ஸ்".

இந்த படத்தில் சித்ரா கால் சென்டரில் வேலை செய்யும் கனவுகள் நிறைந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்பட கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஜே.சபரீஷ் என்பவர் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார்.



இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கால்ஸ் திரைப்படத்தினை வரும் பிப்ரவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News