சினிமா
ஐஸ்வர்யா தத்தா

13 கிலோ எடை குறைத்த ஐஸ்வர்யா தத்தா

Published On 2021-02-13 17:31 IST   |   Update On 2021-02-13 17:31:00 IST
தமிழ் சினிமாவில் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான ஐஸ்வர்யா தத்தா படத்திற்காக உடல் எடையை 13 கிலோ குறைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான ஐஸ்வர்யா தத்தா, நடிப்பில் தற்போது ‘ஷ்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து இருக்கிறார்.

கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.



பிக்பாஸ் மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார். ஆரி நடிக்கும் அலேகா, பப்ஜி, கூடவன், கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் மற்றும் மிளிர் முதலான படங்களில் நடித்து வருகிறார்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதைகளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் அமைந்திருக்கின்றன. இப்படங்கள் தன் திரைவாழ்வின் முக்கியமான படங்களாக, திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார்.

Similar News