சினிமா
மடோனா செபாஸ்டியன்

காதலரை அறிமுகப்படுத்திய மடோனா செபாஸ்டியன்

Published On 2021-02-11 18:25 IST   |   Update On 2021-02-11 19:27:00 IST
பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன், தனது காதலரை அறிமுகப்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. 

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ராபி ஆபிரகாம். இவர் 'நேரம்', 'ஓம் ஷாந்தி ஓஷானா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் "உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிவதிப்பார்" என்று பதிவு செய்திருக்கிறார்.



தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த பதிவை செய்திருக்கிறார் மடோனா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Similar News