விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு என்று கூறியிருக்கிறார்.
பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு - லோகேஷ் கனகராஜ்
பதிவு: பிப்ரவரி 10, 2021 20:21
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓட்டிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மாஸ்டர்' படத்தில் டெலிட்டட் சீன்கள் நீக்கப்பட்டது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, படத்தின் ஃப்ளோ பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக சில காட்சிகளை எடுக்க முடிவு செய்தோம்.
படத்தின் நீளமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதோடு, விஜய் சார் இந்த மாதிரி பேச ஆரம்பிப்பது செகெண்ட் ஆஃப்ல இருந்துதான். அப்போது, கேரக்டர் முழுமையாக மாறியபிறகு, இந்தக் காட்சிகள் வைத்தால் நேர்கோடாகிவிடும். இப்படி, அந்தக் காட்சி இடம்பெறாமல் போனதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு இது. ஆனால், இந்த முடிவு மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு என்றார்.