சினிமா
தனுஷ்

ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்

Published On 2021-02-08 14:26 IST   |   Update On 2021-02-08 14:26:00 IST
ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் தனுஷ் அமெரிக்கா செல்ல உள்ளார்.
நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். 

இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். 



இந்நிலையில், தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ், நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவில் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மே மாதம் தான் தனுஷ் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிப்பதற்காக செல்ல உள்ள தனுஷுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Similar News