சினிமா
ஜமீலா ஜமீல்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்

Published On 2021-02-08 10:09 IST   |   Update On 2021-02-08 10:09:00 IST
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும் தனக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டல் வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இதற்கு வெளிநாட்டு பிரபலங்கள் பலர் ஆதரவு அளித்து வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொருமுறையும் தனக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் வருவதாக பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து நடிகை ஜமீலா ஜமீல் பதிவிட்டுள்ளதாவது: “இந்திய விவசாயிகள் குறித்தும், அங்கு நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் கடந்த சில மாதங்களாக நான் பலமுறை பேசியிருக்கிறேன். ஒவ்வொருமுறை அவ்வாறு பேசும்போதும் நான் கொலை மிரட்டல்களையும், பாலியல் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன். நானும் ஒரு சக மனிதர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மிரட்டுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை ஜமீலா ஜமீலின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News