சினிமா
நந்திதா

நந்திதாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரசிகர் மீது புகார்

Published On 2020-01-13 14:38 IST   |   Update On 2020-01-13 14:38:00 IST
தமிழில் அட்டகத்தி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை நந்திதாவுக்கு ரசிகர் ஒருவர் ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

நந்திதா நடிப்பில் கடந்த ஆண்டு தேவி 2 படம் வெளியானது. சமூக வலை தளங்களில் தீவிரமாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயம் தனது கவர்ச்சியான படங்களையும் பதிவிடுவார்.



இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் வாஞ்சி செழியன் என்ற ரசிகர் நந்திதாவுக்கு ஆபாச செய்திகளை இன்பாக்ஸ்க்கு அனுப்பி வந்துள்ளார்.

அந்த நபரை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளார் நந்திதா. அதில் வாஞ்சி செழியன் அனுப்பிய ஆபாசமான குறுஞ்செய்திகள் இடம் பெற்றுள்ளன. அந்த பதிவில், ‘இது போன்ற நபர்களை என்ன செய்வது, இவர்களுக்கு குடும்பம் இல்லையா?’ என்றும் நடிகை நந்திதா கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News