சினிமா
எஸ்.ஏ.சந்திரசேகர்

நாட்டைக் காக்க நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர்

Published On 2020-01-13 05:19 GMT   |   Update On 2020-01-13 05:19 GMT
காஞ்சிபுரத்தில் விஜய் ரசிகர் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர், நாட்டைக் காக்க நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும் என்று பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் விஜய் ரசிகர் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை. மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள், அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் வெற்றியடைய முடியும்.

நாட்டைக் காக்க நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும். டிராபிக் ராமசாமி, ஐஏஎஸ் சகாயம் போன்ற சமூக ஆர்வலர்கள் உடன் விஜய் இணைய சாத்தியமில்லை. குடி உரிமை சட்ட திருத்த மசோதா மிகவும் குழப்பமாக உள்ளது. அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதை பற்றி கருத்து கூற இயலவில்லை.



கடந்த நான்கு ஐந்து வருடமாக திரைப்படத்துறை அழிவை நோக்கி மிக மோசமாக சென்று கொண்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. அரசு அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் முதல் கொண்டு நடிகர்கள் சங்கம் வரை அனைத்திலும் தலையிடுகிறார்கள்’ என்றார்.
Tags:    

Similar News