சினிமா
நேஹா பென்ட்சே

மூன்றாவது மனைவியானது தவறா? - நடிகை நேஹா பதிலடி

Published On 2020-01-12 14:44 IST   |   Update On 2020-01-12 14:44:00 IST
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நேஹா பென்ட்சே, மூன்றாவது மனைவியானது தவறா என கேட்டுள்ளார்.
மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நேஹா பென்ட்சே. மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்தார். சில டி.வி., சீரியல்களிலும் நடித்து வந்தார். இவர் சமீபத்தில், ‌ஷர்துல் பயஸ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டார். ‌ஷர்துல் பயசுக்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார். 

இந்த 2 திருமணம் வழியாக, அவர் 2 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த நிலையில், இப்படி மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுவிட்டீர்களே என, நேஹாவை பலரும் கேட்டுக் கொண்டே இருந்தனர். அதுகுறித்து, அவர் பதில் ஏதும் சொல்லாமலேயே இருந்து வந்தார். தொடர்ந்து இதே கேள்வியே மாற்றி மாற்றி கேட்கப்பட, ஒரு கட்டத்தில், இந்த கேள்வி அவருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. 

சமீபத்தில், பேட்டி அளித்த நேஹா, தன்னுடைய கோபத்தைக் கொட்டியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- உலகத்தில் எங்குமே நடக்காமல், நான் மட்டுமே, ஒருவருக்கு மூன்றாவது தாரமாக போனதாக சொல்கின்றனர். இன்று, ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. 



தங்களுடைய வாழ்க்கைக்காகத்தான் எல்லோரும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து, அதன் வழியில் பயணிக்கிறார்கள் என்பது மிக நன்றாக தெரிந்தும், இது ஏதோ மிகப்பெரிய தவறு போல பேசுவது சரியான அணுகுமுறை அல்ல.

ஒரு ஆண், ஏற்கனவே இரு பெண்ணோடு உறவில் இருந்தார் என்பதைத்தான் குற்றமாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது, யாரும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. திருமணத்துக்கு முன்பே கூட, எல்லோருமே சிலருடன் தொடர்பில்தான் இருக்கின்றனர்.

இவ்வாறு நேஹா கூறி இருக்கிறார்.

Similar News