சினிமா
விஜய் சேதுபதி, சுருதி ஹாசன்

வைரலாகும் லாபம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Published On 2020-01-12 12:54 IST   |   Update On 2020-01-12 12:57:00 IST
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார்.

`லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்துள்ளார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 



லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். கமர்சியல் கலந்து உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதும் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் பேசியதாவது, "இங்கு சுட்டவர்களும் குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்" என்றார்.

Similar News