சினிமா
சாரா அலிகான்

நடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்

Published On 2020-01-11 13:06 IST   |   Update On 2020-01-11 14:13:00 IST
பிரபல பாலிவுட் நடிகையும், சயீப் அலிகானின் மகளான சாரா அலிகானிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளிடம் ரசிகர்கள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இதில் சில நடிகைகளுக்கு நகக்கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தி நடிகை சாரா அலிகானையும் ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தமிட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது. இவர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் மகள் ஆவார். அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 



சாரா அலிகானும் பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து விட்டு திரும்பிய சாரா அலிகானை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர். அப்போது ஒரு ரசிகர் அவரது கையைப்பிடித்து இழுத்து முத்தமிட்டார்.

இதனால் சாரா அதிர்ச்சியானார். முத்தமிட்டவரை பாதுகாவலர் பிடித்து தள்ளினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஜிம்மில் இருந்து வந்த போது சாரா அலிகான் ஆபாச ஆடை அணிந்து இருந்ததாக குறைகூறி வருகிறார்கள்.

Similar News