சினிமா
மதுஷாலினி

அவர்களின் பேச்சால் குழப்பத்துக்கு ஆளானேன் - மதுஷாலினி

Published On 2020-01-10 19:35 IST   |   Update On 2020-01-10 19:35:00 IST
அவன் இவன், பிரம்மன், தூங்காவனம் படங்களில் நடித்த மதுஷாலினி, அவர்களின் பேச்சால் குழப்பத்துக்கு ஆளானேன் என்று கூறியிருக்கிறார்.
பாலா இயக்கிய அவன் இவன், சசிகுமார் நடித்த பிரம்மன், கமல்ஹாசனின் தூங்காவனம் உட்பட சில படங்களில் நடித்தவர் மது ஷாலினி. பின்னர் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர், இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் நடிப்பில் உருவான பஞ்சராக்‌ஷரம் கடந்த மாதம் வெளியானது. 

மதுஷாலினி அளித்த பேட்டியில் கூறியதாவது:- இடைவெளி எல்லாம் இல்லை தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் அவை அனைத்துமே ஒரே மாதிரியான கேரக்டர் கொண்டவையாக இருந்தன. நடித்த கேரக்டரிலே நடிக்க வேண்டாம் என்பதால் அவற்றில் நடிக்கவில்லை. இருந்தாலும் மற்ற மொழிகளில் பிசியாகத்தான் நடித்து வருகிறேன். 



எனக்கு ஒரு விஷயம் இங்கு புரியவில்லை. எப்போதாவது சில இயக்குனர்களை விழாக்களிலோ அல்லது எங்காவதோ சந்திக்கும்போது, 'இந்த கேரக்டருக்கு உங்களைத்தான் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். நீங்கள் பிசியாக இருப்பீர்கள் என்று விட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. 

பிறகு நான் தமிழில் நடிக்கும்போது, உங்களை இங்க பார்க்கவே முடியலையே என்கிறார்கள். நான் வேறு மொழிக்குச் சென்றதும் நீங்க இல்லைன்னா என்ன, உங்க படங்கள் பேசுகின்றன என்கிறார்கள். எனக்கு இப்படி பேசுவது குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொண்டேன். நான் நடிகை, எந்த மொழியில் இருந்து வந்தாலும் ரசித்து நடிக்க வேண்டியது என்பதுதான் அது’. இவ்வாறு அவர் கூறினார். 

Similar News