சினிமா
ஹிப்ஹாப் ஆதி

காதலர் தினத்தை டார்கெட் செய்யும் ஹிப்ஹாப் ஆதி

Published On 2020-01-07 09:36 IST   |   Update On 2020-01-07 09:41:00 IST
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது.
‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் ‘நான் சிரித்தால்’. ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கி மிகவும் பிரபலமான ‘கெக்க பெக்க’ எனும் குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.



இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் இந்தாண்டு காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) ரிலீசாக உள்ளது. ஏற்கனவே 2 ஹிட் படங்களை கொடுத்த ஹிப்ஹாப் ஆதி, இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி அடையும் முனைப்பில் உள்ளார். இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், முனீஸ்காந்த், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Similar News