சினிமா
நிதி அகர்வால்

படம் ஹிட் ஆனதால் ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய ஜெயம் ரவி பட நடிகை

Published On 2020-01-07 08:38 IST   |   Update On 2020-01-07 08:38:00 IST
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை ஒருவர், தான் நடித்த படம் ஹிட் ஆனதால் ரூ.1 கோடிக்கு சொகுசு கார் வாங்கியுள்ளார்.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பூமி படத்தில் நடிப்பவர் நிதி அகர்வால். இந்த படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் டைரக்டு செய்கிறார். நிதி அகர்வால் இந்தியில் மைக்கேல் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் அவர் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யவும் தயங்கினார்கள். 

இதனிடையே பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நிதி அகவர்வால் நடித்த ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. நிதி அகர்வால் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகே ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. 



இந்த நிலையில் வெற்றியை கொண்டாடும் விதமாக நிதி அகர்வால் சொந்தமாக ‘போர்ச்சே’ என்ற சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.1 கோடி ஆகும். அந்த காரை ஓட்டி செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தின் தயாரிப்பாளரான நடிகை சார்மி ஆடி கார் வாங்கி இருக்கிறார்.

Similar News