சினிமா
ஜீவா, ரியா சுமன்

சீறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2020-01-06 13:38 IST   |   Update On 2020-01-06 13:38:00 IST
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீறு’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா, அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருக்கிறார். ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் செவ்வந்தியே பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது. இப்படம் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் படத்தின் பின்னணி வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படம் வருகிற 24-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News