சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என கூறினார்.
காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் - நயன்தாரா பேச்சு
பதிவு: ஜனவரி 05, 2020 18:54
நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் சினிமா விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீபகாலமாக ஜோடியாக சந்தோஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.
உங்கள் பெற்றோர், வாழ்க்கை துணை, துணையாக போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவரது கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம். புதுவருட சபதம் எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும். நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி.
வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஹீரோயின் படங்கள் வருவது பெருமையாக இருக்கிறது. சமூகவலைதளங்களில் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? எனக்கு கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும் தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை’.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :