தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.இரஞ்சித், புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.
புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய பா.இரஞ்சித்
பதிவு: ஜனவரி 02, 2020 21:08
பா.இரஞ்சித்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் பா.இரஞ்சித். மக்களை சிந்திக்க வைப்பதே சினிமா என்று பயணித்து வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கூகை திரைப்பட இயக்கம் என சமூக சமத்துவத்தை நோக்கமாக கொண்டு உருவாக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
புத்தாண்டு மற்றும் பீம்கோரேகான் நாளான ஜனவரி முதல் நாளில், ஓசூர் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா பகுதிகளில் இயக்குநர் பா.இரஞ்சித் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அம்பேத்கர் அரசியல் பள்ளி, சட்ட ஆலோசனை மையம், விளையாட்டு மற்றும் கலைத்திறமைகள் பயிற்சி பள்ளிகள், அம்பேத்கர் நூலகங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவோர் ஆலோசனை மையம் போன்றவற்றை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் கர்நாடக மற்றும் தமிழக அரசியல் ஆளுமைகள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த பயணத்தின் போது பா.இரஞ்சித் திறந்து வைத்த ஜெய்பீம் லா கிளினிக் (Jaibheem Law Clinic) இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாதது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :