சினிமா
ராஷி கண்ணா

சினிமாவில் அதெல்லாம் சகஜம் - ராஷி கண்ணா

Published On 2020-01-02 11:36 IST   |   Update On 2020-01-02 11:36:00 IST
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா, சினிமாவில் அதெல்லாம் சகஜம் என தெரிவித்துள்ளார்.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொரு நாளும் இன்னும் நல்ல மனிதராக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நேற்றை விட இன்று இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்காக நம்முடன் நாமே போராட வேண்டும். 

இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்து 7 ஆண்டுகளில் விதவிதமான கதைகள் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். இதன் மூலம் எனது எண்ணங்களில் நிறைய மாற்றங்கள் வந்து இருக்கிறது. எனது முடிவுகளையும் மாற்றி அமைத்து இருக்கிறேன். அந்த அளவுக்கு கதாபாத்திரங்கள் தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது. எனது யோசிக்கும் தன்மையும் விசாலமாகி இருக்கிறது. சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம்.



இதற்கு முன்பு விமர்சனங்களுக்கு உடனே பதில் கொடுப்பேன். கருத்துகளும் சொல்வேன். படம் தோல்வி பற்றி விமர்சித்தாலோ கிசுகிசுத்தாலோ உடனே கோபம் வரும். இப்போது அது சுத்தமாக குறைந்து விட்டது. மிகவும் சாந்தமாக மாறி விட்டேன். நேற்றை விட நன்றாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். இந்த புத்தாண்டில் கூட அந்த முயற்சியில்தான் ஈடுபட்டு இருக்கிறேன்.”

இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.

Similar News