சினிமா
ரிஷி

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரிஷி ரித்விக்

Published On 2020-01-01 21:11 IST   |   Update On 2020-01-01 21:11:00 IST
அட்டு படத்தில் நாயகனாக நடித்து பாராட்டுகளை குவித்த ரிஷி ரித்விக், அடுத்ததாக போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
அட்டு படத்தில் நாயகனாக நடித்து பாராட்டுகளை குவித்தவர் ரிஷி ரித்விக். அடுத்து அவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை எம்.டி.ஆனந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். `மரிஜூவானா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிக்கிறார். 

இந்த படத்தில் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷா பார்த்தலோம் என்ற மாடல் நடிக்கிறார். மேலும் பவர்ஸ்டார் சீனிவாசன், பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாலா ரோசையா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கார்த்திக் குரு இசையமைக்க, தயாரிப்பாளர் எம்.டி.விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 



படம் பற்றி ரிஷி ரித்விக் கூறியதாவது: ‘இன்று இளைஞர்களை போதை பழக்கம் தான் பெரிதும் சீரழிக்கிறது. போதைப்பொருள் பல விதங்களில் கிடைக்கிறது. அந்த உலகத்தின் இன்னொரு பக்கத்தை படம் காட்டும். வடசென்னை பகுதி படங்களில் அதிகமாக நடிப்பதாக தோன்றுகிறது. மக்களின் வாழ்வியல் படங்கள் தேடி வருவதில் மகிழ்ச்சிதான். இந்த படத்தில் போலீசாக நடிப்பதற்காக சில போலீஸ் அதிகாரிகளுடன் பழகி அவர்களது நடை, உடை, பாவனைகளை கற்றுக்கொண்டேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News