தமிழ், தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், ஐதராபாத்தில் வீடு வாங்க இருக்கிறார்.
ஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்
பதிவு: செப்டம்பர் 18, 2019 17:11
நிவேதா பெத்துராஜ்
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், தெலுங்கில் தனக்கு நல்ல மார்க்கெட் உருவானதால், அங்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். மதுரையை சேர்ந்த அவர், துபாயில் பிறந்து வளர்ந்தவர்.
தமிழ் படங்களில் நடிக்கும்போது சென்னையில் உறவினர் வீடு அல்லது நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், தெலுங்கில் நடிக்கும்போது ஐதராபாத்தில் வாடகை வீட்டில் தங்குகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் பட வாய்ப்புகள் அதிகரிப்பதால் ஐதராபாத்தில் தனி பங்களா வாங்கி குடியேறுகிறார். ஐதராபாத்திலேயே தன் உதவியாளர்கள் மூலம் புது வீடு தேடும் பணிகளை தொடங்கியுள்ளார்.