சினிமா
பிகில் பட போஸ்டர்

செப்டம்பர் முழுவதும் பிகில் அப்டேட் தான் - அர்ச்சனா கல்பாத்தி டுவிட்

Published On 2019-08-29 06:00 GMT   |   Update On 2019-08-29 06:00 GMT
செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடயே பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர்.



இந்த நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:  “என்னை நம்புங்கள் அடுத்தது வெறித்தனம் பாடல் தான். இந்த செப்டம்பர் மாதம் முழுவதுமே பிகில் அப்டேட் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும்“ என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர். 
Tags:    

Similar News