சினிமா
மணிரத்னமுடன் கூட்டணி வைத்த ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், மணிரத்னம் வசனம் எழுதிய படத்தில் தனசேகரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். #Maniratnam #GVPrakash
இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார்.
பாலா, ராஜீவ் மேனன், வசந்தபாலன் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் ஜீ.வி.பிரகாஷ் அடுத்து தனசேகரன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்துக்கு வசனம் எழுத இருக்கிறார் மூத்த இயக்குனர் மணிரத்னம். முன்னதாக இந்த படத்தையே மணிரத்னம் இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் பட இயக்கத்தில் மணிரத்னம் பிசியாக இருப்பதால் வசனம் மட்டும் எழுதுகிறார். 96, சீதக்காதி படங்களின் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Maniratnam #GVPrakash