சினிமா

ராம்கோபால் வர்மாவிற்கு எதிராக தெலுங்கு தேச தொண்டர்கள் போராட்டம்

Published On 2018-12-23 15:26 IST   |   Update On 2018-12-23 15:26:00 IST
பிரபல இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மாவிற்கு எதிராக தெலுங்கு தேச தொண்டர்கள் போராட்டம் நடத்தி வழக்கு தொடர்ந்துள்ளார்கள். #RamGopalVarma
பிரபல இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்து படங்களை இயக்கி வருகிறார். அவர் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சியை நிறுவிய என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி சிவபார்வதி கதையை சினிமா படமாக எடுத்துள்ளார். அதற்கு லட்சுமியின் என்.டி.ஆர். என்று பெயர் சூட்டி உள்ளார்.

இப்படத்தில் என்.டி.ராமராவின் மருமகனும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை வில்லனாக சித்தரித்து கதை களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, இப்படத்துக்கு எதிராக தெலுங்கு தேசம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜயவாடாவில் உள்ள பிலிம்சேம்பர் அலுவலகம் முன்பு தெலுங்கு தேச கட்சி தலைவர் சாம்பசிவராவ் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு எதிராக கோ‌ஷங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள். அப்போது, ராம்கோபால் வர்மாவின் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.



இதற்கிடையே கர்னூல் எம்.எல்.ஏ. எஸ்.வி.மோகன் ரெட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் நற்பெயரை கெடுக்கும் விதமாக இயக்குனர் ராம்கோபால் வர்மா யூடியூப்பில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News