சினிமா

அதர்வா ஜோடியான பார்வதி நாயர்

Published On 2018-11-30 17:45 IST   |   Update On 2018-11-30 17:45:00 IST
ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாக இருக்கும் மின்னல் வீரன் படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்க பார்வதி நாயர் ஒப்பந்தமாகி உள்ளார். #MinnalVeeran #Atharvaa #ParvatiNair
மலையாள நடிகையான பார்வதி நாயர் அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்த நிமிர் படத்தை தொடர்ந்து வேறு எந்தப் படமும் தமிழில் இன்னும் வெளியாகவில்லை. 

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சீதக்காதி திரைப்படத்தில் ரம்யா நம்பீசனும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். சீதக்காதி படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ள அவர் தற்போது புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். 



ஆதி, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த மரகதநாணயம் கடந்த ஆண்டு வெளியாகி ஓரளவு கவனம் பெற்றது. ஏஆர்கே சரவணன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். அவர் தற்போது இயக்கும் புதிய படம் மின்னல் வீரன். அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். #MinnalVeeran #Atharvaa #ParvatiNair

Tags:    

Similar News