சினிமா

முருகதாஸ் கவனமாக இருக்க வேண்டும் - கஸ்தூரி பேட்டி

Published On 2018-11-04 09:57 GMT   |   Update On 2018-11-04 09:57 GMT
கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, இயக்குனர் முருகதாஸ் கவனமாக இருக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். #ARMurugadoss #Kasturi
கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

ஒரு ஆணோடு சம்பந்தப்பட்டு பேசியதால் தங்களின் மதிப்பு உயரும் என்று எந்த பெண்ணும் நினைப்பது கிடையாது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் கூட அதை வெளியே சொல்வது இல்லை.

இதுபோன்று பலர் தவறாக கூறுவதால்தான் பாதிக்கப்படும் பெண் அதுதொடர்பாக வெளியே சொல்ல முன்வருவது இல்லை. சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதால், அந்த பெண்ணின் தரம் உயருகிறதா? இல்லையே. சிலர் அவர்களின் சுய விளம்பரத்துக்காக இதுபோன்ற தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள் என்று சொல்கிறார்கள். முக்கியமாக, ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையாது என்று பலர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

இப்படி பெண், தனக்கு அவமானம் நடந்தது என்று வெளியே சொன்னால் பெண்தான் காரணம், பெண் மீதுதான் தவறு என்று சமுதாயத்தில் குற்றம் சுமத்துகிறார்கள். தற்போது ‘மீ டூ’ வந்ததால்தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தைரியமாக வெளியே சொல்கிறார்கள். சுய விளம்பரத்துக்காக நடிகைகள் உள்பட யாரும் குற்றச்சாட்டு கூறுவது இல்லை.

ஒரு இடத்தில் பாலியல் தொல்லை நடந்தால், அதில் இருந்து விடுபடதான் அனைவரும் நினைப்பார்கள். அதை விட்டுவிட்டு புகார் கொடுக்க எந்த பெண்ணுமே நினைக்க மாட்டார்கள். எனவே ஏன் புகார் சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டாம். குற்றம் சாட்டப்படும் நபரிடம்தான் பதில் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு சினிமாவின் கதையை பார்த்து காப்பி அடித்து மற்றொரு சினிமா எடுப்பது இப்போது மட்டும் நடப்பது அல்ல. பெரிய, பெரிய நடிகர்கள் நடித்த சினிமாக்கள் கூட காப்பி அடித்து வேறு சினிமாக்கள் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு எல்லாம் பிரச்சினை வந்தது இல்லை.

சர்கார் படத்தை இயக்கிய முருகதாஸ் கூட, ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்தின் கருவை எடுத்து கஜினி படம் இயக்கினார். தமிழகத்தில் இப்போது இருக்கக்கூடிய பெரிய இயக்குனர்கள் மீது வராத கதை திருட்டு என்ற புகார் முருகதாஸ் மீது தொடர்ச்சியாக மீண்டும் வர என்ன காரணம் என்ற யோசனை வருகிறது. எனவே இயக்குனர் முருகதாஸ் கவனமாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற குற்றச்சாட்டு வராமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எல்லா இடத்திலும் சமத்துவம் இல்லை. சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என்ற கோர்ட்டு உத்தரவு வழங்கி உள்ளது. ஆனால் சினிமாத்துறையில் உள்ள மேக்கப் துறை, லைட்மேன் போன்றவற்றில் பெண்களுக்கு அனுமதி இல்லை. அது ஒருதலை பட்சமான வி‌ஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News