சினிமா

இந்துக்கள் பற்றி பேச்சு - விஜய் தந்தைக்கு முன்ஜாமீன்

Published On 2018-10-08 13:40 GMT   |   Update On 2018-10-08 13:40 GMT
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில் இந்துக்கள் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கிடைத்துள்ளது. #SAChandasekar
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பேசும் போது ‘மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது’ என்று விமர்சித்தார்.

இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து அமைப்பின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மத உணர்வை புண்படுத்தியதாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு தாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தர விட்டார்.
Tags:    

Similar News